நடிகர் விஜயகாந்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் அவர் சென்னை திரும்பினார். அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், விஜயகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவர், நேற்று காலை துபாய்க்கு புறப்பட்டு சென்றார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
