நடிகர் விஜய்க்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புலி படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்தில் ரூ.15 கோடி மறைத்ததாக அவர் மீது வருமான வரித்துறை 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
அதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இடைக்காலத் தடையை அக்டோபர் 26 வரை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
