Home Uncategorized நடிகர் விஜயுடன் பிரதீப் ரங்கநாதன் சந்திப்பு

நடிகர் விஜயுடன் பிரதீப் ரங்கநாதன் சந்திப்பு

பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து, ‘டிராகன்’ படக்குழுவினருடன் விஜய்யைச் சந்தித்திருக்கிறார். ‘டிராகன்’ படத் தயாரிப்பாளரும், விஜய்யின் ‘G.O.A.T’ படத் தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்தியும் இவர்களுடன் விஜய்யைச் சந்தித்திருக்கிறார்.

விஜய்யைச் சந்தித்தது குறித்து பிரதீப், ” ‘கலக்குறீங்க ப்ரோ’ தளபதியிடமிருந்து வந்த அந்த வார்த்தை எனக்குள் எவ்வளவு மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தியது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். உங்களின் பாராட்டு வார்த்தையும், எங்களுக்காக நீங்கள் ஒதுக்கிய நேரத்திற்கும் நன்றி. ‘சச்சின்’ பட ரீ-ரிலீஸ்காக காத்திருக்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version