Wednesday, March 4, 2026
HomeUncategorizedநடிகர் வடிவேலு, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

நடிகர் வடிவேலு, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் வடிவேலு ரூ.5 லட்சம் நிதியுதவி!

நாடு முழுவதும் கொரோனா  இரண்டாம் அலையால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, திமுக தலைமையிலான அரசு அமைந்தது. அப்போது, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்குமாறு முதல்வநடிகர் வடிவேலு ரூ.5 லட்சம் நிதியுதவிர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார் அவரது கோரிக்கைக்கு இணங்க பலர் நிதியுதவி வழங்கினர்.
 
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெற்ற நிதி விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என முதல்வர் உறுதியளித்ததன் படி, அதன் விவரங்களை அறிந்து கொள்ள இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 480 கோடி நிதி திரண்டு உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் அறிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே உலகம் உற்றுப் பார்க்கும் அளவுக்கு கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். இது மக்களுக்கு பொற்காலம் என்று புகழாரம் சூட்டினார். மேலும் கொங்குநாடு விவகாரம் பேசிய அவர், நல்லா இருக்க தமிழ்நாட்டை எதுக்கு பிடிச்சிகிட்டு. நான் அரசியல் பேசல. இதெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது என்றும் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments