நடிகர் யோகி பாபு கோவை மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தனது புதிய படங்களின் கதைக் கோப்புகளை சாமியின் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்த அவர், அத்துடன் அர்த்தஜாம பூஜையில் கலந்துகொண்டார். கோவையில் நடைபெற இருக்கும் ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தின் படப்பிடிப்பில் மாதவனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
