திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப்பெருமானுக்கு நட்சத்திர அபிஷேகம்… திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நடராஜப்பெருமானுக்கும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகா அபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.
அண்ணாமலையார் கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் இன்று ஆவணி மாத சதுர்தசி திதி அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நடராஜப்பெருமானுக்கு வருடத்திற்கு 6 முறை அபிஷேகம் நடைபெறுவது வழக்கம் .
இதில் 3 நட்சத்திர அபிஷேகமும், 3 திதி அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம் 1சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் 2 ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரம் 3மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் இந்த அபிஷேகங்கள் நட்சத்திர அபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது.
நடராஜப்பெருமானுக்கு நட்சத்திர மற்றும் திதி அபிஷேகங்கள் உலகிலுள்ள எல்லா சிவாலயங்களிலும் காலை மாலை இரு வேலைகளிலும் நடைபெறுவது வழக்கம். இதேபோல் 4ஆவணி மாதம் சதுர்தசி திதியிலும் 5புரட்டாசி மாதம் சதுர்த்தசி திதியில் 6மாசி மாதம் சதுர்த்தசி திதியில் மாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும்.
இந்நிலையில் இன்று அண்ணாமலையார் ஆலயத்தில் ஆவணி மாதம் மாதம் சதுர்த்தசி திதியில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானுக்கு பச்சரிசி மாவு அபிஷேக பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சைச்சாறு பால் தயிர் தேன் சந்தனம் விபூதி பன்னீர் மற்றும் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார் ஸ்தபன பூஜை செய்து ஸ்தபனத்தில் இருக்கும் அந்தப் புனித நீரை நடராஜப் பெருமானுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது .
தொடர்ந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமாளுக்கு பல்வேறு வகையான வண்ண வண்ண மலர்களை கொண்டு மாலையில் தொடுத்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு ஷோடச உபசாரம் என்று அழைக்கப்படுகின்ற தீப ஆராதனை நடைபெற்று அதனைத் தொடர்ந்து சிறப்பு மகா பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜபெருமானை வழிபட்டனர்.
