Wednesday, March 11, 2026
HomeUncategorizedநவராத்திரி பண்டிகை 9 நாட்களுக்கான பிரசாதங்கள் என்னென்ன?

நவராத்திரி பண்டிகை 9 நாட்களுக்கான பிரசாதங்கள் என்னென்ன?

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்தெந்த பிரசாதம் செய்ய வேண்டும்? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன தெரியுமா? நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும்.

நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் விநியோகிப்பது நல்லது.

முதல் நாள்:

வெண்பொங்கல், மொச்சை சுண்டல் பிரசாதமாகக் கொடு ப்பது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும்.

இரண்டாம் நாள்:

புளியோதரை, வேர்க்கடலை சுண்டல் பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன்மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும்.

மூன்றாம் நாள்:

கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல். இதனால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

நான்காம் நாள்:

பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதம், பட்டாணி சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும்.

ஐந்தாம் நாள்:

தயிர் சாதம், பூம்பருப்பு சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம்.

ஆறாம் நாள்:

தேங்காய் சாதம், பச்சைபயறு சுண்டல் பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி தனம் பெருகும். எதிர்ப்புகள் விலகும்.

ஏழாம் நாள்:

எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல் பிரசாத மாக அளிக்கிறோம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும்.

எட்டாம் நாள்:

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்த பருப்பு பாயசத்தை, வடையுடன் நிவேதனம் செய்ய வேண்டும். கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம்.

ஒன்பதாம் நாள்:

சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசல், வேர்க்கடலை சுண்டல் நிவேதனம் செய்யலாம். இதனால் குழந்தை வரம் பெறலாம்.

பத்தாம் நாள்:

விஜயதசமி, மூன்று சக்திகளும் தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள்பாலிக்கும் சுபநாள். அன்று தொடங்கும் எல்லாக் காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும். பால் பாயாசம், காராமணி சுண்டல் மற்றும் இனிப்பு வகைகளை நைவேத்தியம் செய்யலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments