Wednesday, March 4, 2026
HomeUncategorizedநயன்தாரா நடிக்கும் 11 பாடல்களுடன் தயாராகும் படம்

நயன்தாரா நடிக்கும் 11 பாடல்களுடன் தயாராகும் படம்

தமிழ்த்திரையில் ஐயா படம் மூலம் அறிமுகம் ஆனா நடிகை நயன்தாரா, இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.  தற்போது, அவர் ‘பாட்டு’ எனும் மலையாள படத்தில் நடிக்க உள்ளார். பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தை இயக்குகிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் ப்படத்திற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தான் இசையமைக்க உள்ளார். அவர் இசையமைக்கும் முதல் படம் இதுவாகும். 

இதன் தலைப்புக்கு ஏற்ப, படத்திலும் பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்தப் படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. பாட்டு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments