Monday, March 16, 2026
HomeUncategorizedநீட் விண்ணப்பங்களை பதிவேற்றம் - கால அவகாசம் நீட்டிப்பு

நீட் விண்ணப்பங்களை பதிவேற்றம் – கால அவகாசம் நீட்டிப்பு

நீட் எழுதும் மாணவர்களின் நலன் கருதி, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வசதியாக ஏப்.15ம் தேதி(இன்று) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதன்படி இன்று இரவு 11.59 மணி வரை மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதன்படி காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

தேர்வர்கள் இன்று இரவு 11.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்ப கட்டனத்தை செலுத்த கால அவகாசம் இரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது. நீட் தேர்வுக்கு, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், பழைய விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நினைப்பவர்கள் இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை, https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments