தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோசப் விஜய், இதுவரை எந்தவொரு செய்தியாளர் சந்திப்பையும் நடத்தாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைப் பின்பற்றி அவர் வாரம் ஒருமுறை தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) போன்றதொரு விசேஷ நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற சுவாரசியமான கோரிக்கை சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் அவர்கள் கடைசியாகப் பதவிப் பிரமாண விழாவின் போது பேசியதோடு சரி, அதற்குப் பிறகு அவரைப் பல்வேறு நிகழ்வுகளில் பார்க்க முடிகிறதே தவிர, மக்கள் முன்னிலையில் அவர் பேசுவதைக் கேட்க முடிவதில்லை என்று நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்; இதன் காரணமாக, அவர் வாரம் தோறும் மக்களின் முன்னிலையில் தோன்றி அந்தந்த வாரத்தில் அரசு செய்த சாதனைகள் மற்றும் அடுத்த வாரத்திற்கான திட்டங்கள் குறித்து நேரடியாக உரையாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் தலைவர்கள் தங்களது எண்ணங்களையும் திட்டங்களையும் மக்களிடம் நேரடியாகப் பகிர்ந்துகொள்ளும் போதுதான் குடிமக்களுக்கு அரசின் மீது முழுமையான நம்பிக்கையும் பாசிட்டிவ் எனர்ஜியும் பிறக்கும் என்பதால், இந்த புதுமையான டாக் ஷோ கோரிக்கை தற்போது அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.