Sunday, September 27, 2026
Homeசெய்திகள்முதல்வர் ஜோசப் விஜய் – ஸ்டாலின், வைகோவை சந்திக்க திட்டம்!

முதல்வர் ஜோசப் விஜய் – ஸ்டாலின், வைகோவை சந்திக்க திட்டம்!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், புதிய முதல்வர் ஜோசப் விஜய் இன்று முக்கியத் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

நேற்று அமைச்சராகவும் இன்று சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பேற்றுக் கொண்ட அவர், மரியாதை நிமித்தமாக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பை ஒட்டி மு.க. ஸ்டாலின் இல்லத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் அடுத்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவையும் அவரது இல்லத்திற்கே நேரில் சென்று சந்திக்க ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

பதவியேற்பு உறுதிமொழியில் தொடங்கி அடுத்தடுத்து நிகழும் இந்த அரசியல் நகர்வுகள், தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments