Home செய்திகள் முதலிரவில் புது பெண் தற்கொலை.. கதவை திறந்தால் ஷாக்.. ஒரு உயிரே போயிருச்சு!

முதலிரவில் புது பெண் தற்கொலை.. கதவை திறந்தால் ஷாக்.. ஒரு உயிரே போயிருச்சு!

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் சோமந்தூர் பள்ளியை சேர்ந்தவர் ஹர்ஷிதா(22). இவருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திரா என்பவருக்கும் நேற்று முன்தினம் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

அனைவருக்கும் திருமண வீட்டார் விருந்து அளித்து அசத்தினர். மணமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அனைவரும் வாழ்த்தி சென்றனர். இதனை அடுத்து சோமந்தூர் பள்ளியில் உள்ள மணமகள் வீட்டில் வைத்து புதுமண தம்பதியின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்திருந்தனர். இதற்கிடையே வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற ஹர்ஷிதா கதவை அடைத்துக் கொண்டார். நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால் கதவை  ஹர்ஷிதா திறக்கவில்லை.  அதன் பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்தபோது அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய மணமகளை பார்த்து உறவினர்கள் பதறினார்கள். 

உடனே அவரை மருத்துவமனைக்கில் கொண்டு சென்று பரிசோதித்த போது ஹர்ஷிதா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உடனே பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். திருமண வீடு துக்கவீடான சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளம் பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version