Monday, March 9, 2026
HomeUncategorizedசுவாமி சின்மயானந்தா காலமான நாளின்று

சுவாமி சின்மயானந்தா காலமான நாளின்று

சுவாமி சின்மயானந்தா காலமான நாளின்று நண்பனால் வாழ்க்கை லகுவாகும், செம்மையுறும். நண்பன், உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் ஒரு பரிசு. ஆனால் நண்பனை மரத்திலிருந்து பறிக்க முடியாது.

விலைகொடுத்து வாங்க முடியாது. நண்பனாக இருக்கச் சொல்லி யாரையும் கட்டாயப் படுத்த முடியாது. நண்பனைக் கண்டு பிடிக்க வேண்டும் பலவற்றைச் செய்து நண்பர்களை உருவாக்குகிறோம்.

ஒரே ஒர் அற்பச் செயலால் அவர்களை இழந்துவிடக் கூடும். நட்பைப் பெறுவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். # உங்களுக்குள் நட்பு என்ற பண்பு இருந்தால்தான் உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள்.

தன்னலமற்றவனாய், நேசமுள்ளவனாய், பிறரது நலத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பவனுக்கே நண்பர்கள் அமைவார்கள். நாய்கள் நேசிக்கப்படுகின்றன.

அவற்றுக்கு நண்பர்கள் சுலபமாகக் கிடைத்து விடுகிறார்கள். காரணம், அவை வாலை ஆட்டுகின்றனவே தவிர, நாக்கை அல்ல. மென்மையுடன் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் அன்பான சொற்களைப் பயன்படுத்துங்கள்.

நண்பர்கள் பெருகுவார்கள். சுருங்கச் சொன்னால், நேசிக்கும் பண்பும் அதைச் செயலில் காட்டும் திறனுமே மேலும் மேலும் நண்பர்களைச் சம்பாதிப்பதற்கான் தகுதிகள். உண்மையில், செயலாக்கப்படும் அன்பே எல்லாச் சமயங்களுக்கும் இதயம். நண்பன் யார்? எவனொருவன் மற்ற எல்லோரும் உங்களை விட்டுப் போன நிலையில் அன்பும் உற்சாகமுமாக வருகிறானோ அவனே உண்மையான நண்பன். உண்மையான நண்பனைக் கண்டுபிடிக்க வெளியில் தேட வேண்டியதில்லை.

நண்பனைப் பெறுவதற்கான தகுதியை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதே சரியான வழி!

சுவாமி சின்மயானந்தா

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments