Thursday, August 13, 2026
Homeவணிகம்‘அட்வான்ஸ் டிப்ஸ்’ வேண்டாம்! Uber, Ola, Rapido-வுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!

‘அட்வான்ஸ் டிப்ஸ்’ வேண்டாம்! Uber, Ola, Rapido-வுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!

ஆன்லைன் வாகன முன்பதிவு செயலிகளில் (Uber, Ola, Rapido போன்றவை) பயணம் தொடங்கும் முன்பே ‘முன்கூட்டியே டிப்ஸ் வழங்கினால் வாகனம் விரைவாகக் கிடைக்கும்’ என்ற நடைமுறையை உடனடியாக நீக்க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

‘மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டுதல்கள் 2025’ பிரிவு 14.15-ன் படி, டிப்ஸ் என்பது முற்றிலும் பயணிகளின் விருப்பத்தின் பேரில், பயணம் நிறைவடைந்த பிறகே வழங்கப்பட வேண்டும் என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

“அட்வான்ஸ் டிப்ஸ்”, “ஆட்-ஆன்” போன்ற ஆப் அம்சங்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு முரணாக இருப்பதோடு, பயணிகள் கூடுதல் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவதால் இத்தகைய வழிமுறைகளை உடனடி பரிசீலனை செய்து மாற்றியமைக்க ஆப் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் வழங்கும் முழு டிப்ஸ் தொகையும் எவ்வித பிடித்தமுமின்றி நேரடியாக ஓட்டுநர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்றும் அரசாங்கம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments