வீடுகளில் வைஃபை சிக்னல் சரியாகக் கிடைக்காத ‘டெட் ஜோன்’ (Dead Zone) பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு சிக்னலை பலப்படுத்தும் அதிநவீன ‘ஹை-ஸ்பீடு டூயல் பேண்ட் சிக்னல் பூஸ்டர்’ (High-Speed Dual Band Signal Booster) சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
2.4GHz பேண்டில் 300Mbps வரையும், 5GHz பேண்டில் 867Mbps வரையும் என ஒட்டுமொத்தமாக 1200Mbps வரை அதிவேக இன்டர்நெட் வசதியை வழங்கும் இந்த சாதனம் மூலம் ஆன்லைன் வீடியோக்களை எவ்வித பஃபரிங்கும் இன்றி ஸ்மூத்தாகப் பார்க்க முடியும். இதன் டூயல் பேண்ட் தொழில்நுட்பம் மூலம் ஒரே நேரத்தில் மொபைல்கள், லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் எனப் பல சாதனங்களை எவ்வித வேகம் குறைவும் இன்றி இணைத்துக் கொள்ள முடியும் என்பதோடு, இதில் உள்ள ‘இண்டெலிஜென்ட் சிக்னல் இண்டிகேட்டர்’ எல்இடி விளக்கு (ப்ளூ மற்றும் ரெட் லைட்) மூலம் சிக்னல் நன்றாகக் கிடைக்கும் சரியான இடத்தை நாமே எளிதில் கண்டறிந்து பொருத்திக்கொள்ளலாம்.

வெறும் சிக்னல் பூஸ்டராக மட்டுமன்றி, இதன் அடிப்பகுதியில் உள்ள ஈத்தர்நெட் போர்ட் (Ethernet Port) மூலம் லேன் ஒயரை நேரடியாக இணைத்து ஒரு புதிய ‘ஆக்சஸ் பாயிண்ட்டாகவும்’ (Access Point) மாற்றிக் கொள்ளும் 2-இன்-1 வசதி கொண்ட இச்சாதனத்தை, டபிள்யூபிஎஸ் (WPS) பட்டன் மூலம் மிக எளிதாக ரவுட்டருடன் பேர் (Pair) செய்து பயன்படுத்தலாம்.
தற்போது இந்த பயனுள்ள சாதனம் இந்திய சந்தையில் ₹2,699 விலையிலும், அமெரிக்க சந்தையில் $39.99 விலையிலும் அமேசான் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.