Thursday, May 7, 2026
HomeUncategorizedபதவி ஏற்பு விழா இல்லை? ஏமாற்றத்துடன் திரும்பிய தவெக தொண்டர்கள்!

பதவி ஏற்பு விழா இல்லை? ஏமாற்றத்துடன் திரும்பிய தவெக தொண்டர்கள்!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பதாலும், பதவி ஏற்பு விழா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததாலும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு இன்று (மே 7) வந்திருந்த ஒரு சில தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

108 இடங்களைப் பெற்ற நிலையில் இன்றே பதவி ஏற்பு விழா நடக்கும் என்று எதிர்பார்த்து வந்தவர்களுக்கு, ஆளுநர் தரப்பிலிருந்து இன்னும் அழைப்பு விடுக்கப்படாத தகவல் ஏமாற்றத்தை அளித்தது. அரங்கின் வாயில்கள் மூடப்பட்டு, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததைக் கண்ட தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments