Wednesday, March 4, 2026
HomeUncategorizedகிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி- வெற்றிக்கு பின் பதறிய குகேஷ்! கார்ல்சன் என்ன செஞ்சாரு தெரியுமா?

கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி- வெற்றிக்கு பின் பதறிய குகேஷ்! கார்ல்சன் என்ன செஞ்சாரு தெரியுமா?

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல, நார்வேவைச் சேர்ந்த 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் உள்பட மொத்தம் 6 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று நடந்த போட்டியில் குகேஷ், நார்வேவின் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை தொடங்கிய குகேஷை விட கார்ல்சனே பெரும்பாலான சமயங்களில் ஆதிக்கம் செலுத்தினார். இருப்பினும் சாமர்த்தியமாக விளையாடிய குகேஷ் இறுதியில் வெற்றி பெற்று, கார்ல்சனுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இதனால், ஏமாற்றம் அடைந்த கார்ல்சன் மேஜையை கையால் ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

Gukesh carlson

இந்த வெற்றியின் மூலம் நார்வே செஸ் போட்டியின் புள்ளிகள் பட்டியலில், குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கார்ல்சன் மற்றும் அமெரிக்காவின் பேபினோ கரானாவை விட வெறும் ஒரு புள்ளிகள் மட்டுமே பின் தங்கியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து குகேஷின் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா கூறுகையில், ‘குகேஷின் திறமையை நாம் பாராட்ட வேண்டும். நீண்ட நேரம் அவர் தோல்வியின் விளிம்பில் மட்டுமே இருந்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து போராடினார். ஆனால், கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். தற்போது, அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்,’ என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments