நாகாலாந்து கவர்னரும் தமிழகத்தை சேர்ந்தவருமான இல.கணேசன் கூறியிருப்பதாவது:
ஒட்டுமொத்த நாகாலாந்து மக்களையும் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் போல் சித்தரிப்பதா?. நாட்டின் கலாச்சாரத்தை சிதைக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு அமைந்துள்ளது.
சாப்பிடும் பழக்கம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். உணவை வைத்து குணாதிசயத்தை முடிவு செய்ய முடியாது.
நாகா மக்களுக்கும் தமிழர்களுக்குமான இணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படக் கூடாது.
ஆர்.என்.ரவி மீது நாகாலாந்து மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்கள்”
