Home Uncategorized ஓவியர் கோபுலு ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி

ஓவியர் கோபுலு ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி

சன் டீவியின் லோகோவை வரைந்தவர் யார் தெரியுமா?  ஓவியர் கோபுலு ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி: (18-06-1924 : 29-04-2015) 

எஸ். கோபாலன் என்ற முழுப்பெயரை ஆனந்த விகடன் ஓவியர் மாலி அவர்கள் சுருக்கி, கோபுலு என்று வைத்தார்.

1941 ஆம் ஆண்டு, ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்த மாலி அவர்கள் விகடன் தீபாவளி மலருக்காக இவரை திருவையாற்றுக்கு அனுப்பினார். தியாக பிரம்மம் அவர்களின் வீட்டில் நான்கு நாட்கள் தங்கி, இவர் வரைந்த முதல் ஓவியம் “தியாகராஜ சுவாமிகள் பூஜை செய்த ராமர் பட்டாபிஷேகம்”தான். 16 வயதே ஆன இவருடன் ஓவியம் வரைய உடன் வந்திருந்தவர், இன்னொரு ஓவிய மேதையான ஓவியர் சில்பி அவர்கள் என்பது எக்ஸ்ட்ரா தகவல். ஆனந்த விகடனில் 1951ஆம் ஆண்டுமுதல் 1968ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 18 ஆண்டுகள் இவர் வரைந்த காமிக் ஸ்ட்ரிப்புகள் (வார்த்தைகள் இல்லாமல் மௌன நகைச்சுவை ஓவியங்கள்) மிகவும் பரவலான வரவேற்பைப் பெற்றது.

தமிழகத்தின் முக்கியமான சில நிறுவனங்களின் லோகோ’க்களை இவர் தன்னுடைய Ad Wave விளம்பர நிறுவனம் மூலம் உருவாக்கினார். ShriRam Chits, குங்குமம், சன் டீவி ஆகியவை குறிப்பிடத்தக்க சில லோகோக்கள்.

காளிமார்க் குளிர்பானத்தை தமிழகம் முழுவதும் பரவலாகக் கொண்டு சென்றதில், இவரது கார்ட்டூன் பாணியிலான விளம்பரம் பெரும்பங்கு வகித்தது. 

ராதா சில்க் எம்போரியம் என்றிருந்ததை ராசி சில்க்ஸ் என்று மாற்றியமைத்து விளம்பரம் செய்தவர் இவர்.

துப்பறியும் சாம்பு, தில்லானா மோகானாம்பாள், வாஷிங்டனில் திருமணம் என்று இவரது ஓவியங்கள் அழகு சேர்த்த காவியங்கள் பல.

2002ல் இவருக்கு ஒருமுறை “ஸ்ட்ரோக்‘ அட்டாக் வந்து உடலின் வலது பக்கம் முழுவதும் செயல்படாமல் போனபோதும், நகைச்சுவை உணர்வோடு “இதுவரைக்கும் நான்தான் ’ஸ்ட்ரோக்‘ போட்டுட்டிருந்தேன். “இப்போது எனக்கே கடவுள் ஸ்ட்ரோக் போட்டுட்டான்’ என்று சொன்னார். அப்போது டாக்டர், “உங்க மூளையோட வலது பக்கம் பாதிச்சதால, உடம்போட இடது பக்கம் செயல்படாது‘ என்று சொன்னார். சிறிது நாட்களில் இவர் இடது கையால் ஓவியம் வரைய ஆரம்பித்தார். நான் இடது கைகளால் ஓவியம் வரைவதைக் கேள்விப்பட்ட டாக்டர், “சீக்கிரமே உங்க வலது பக்க மூளையும் பழையபடி செயல்பட ஆரம்பிச்சுடும்‘ன்னார். அப்படியே நடந்ததில் ஆசரியமில்லை..

ராசி சில்கஸ் என பெயர் மாற்றியது மட்டுமல்ல செல்வி ஜெயலலிதா வை இதில் விளம்பர மாடல் ஆக்கியவர் இவரே..இதன் பின்பே செல்வி ஜெயலலிதா நடிகை ஆனார்

அன்னாரின் நினைவு நாளில் ஆந்தையாரின் அஞ்சலிகள்:

Exit mobile version