Home Uncategorized பாஜக – அதிமுக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா?

பாஜக – அதிமுக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற உரை வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அமித் ஷா , “2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என்று பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி சந்தித்த பிறகே இவ்வாறாக அமித்ஷா பதிவிட்டுள்ளது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதையே இந்த செய்திகள் மூலமாக அமித்ஷா வெளிப்படுத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சிகளும் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version