தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி சார்பாக நேற்று நடைபெற்ற, புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு விழா, வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள், முன்னாள் தமிழக முதலமைச்சர், அண்ணன் திரு O.பன்னீர்செல்வம், முன்னாள் தமிழக அமைச்சர் அண்ணன் திரு. வைத்தியலிங்கம், அமமுக பொதுச்செயலாளர் அண்ணன் திரு TTV.தினகரன், பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அண்ணன் திரு பாலு கலியபெருமாள், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் சார்பாகக் கலந்து கொண்ட, பொதுச்செயலாளர் ஐயா திரு. முனவர் பாஷா, மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் திரு. விடியல் சேகர், புதிய நீதிக் கட்சியின் தலைவர், ஐயா திரு AC. சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் அண்ணன் திரு ரவி பச்சமுத்து, தமமுக தலைவர் அண்ணன் திரு. ஜான் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் அண்ணன் திரு KC.திருமாறன் ஜி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் திரு OP.ரவீந்திரநாத் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது நாட்டில், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், 31% சிறுபான்மையின மக்கள் வீடு கிடைக்கப்பெற்றுள்ளனர். முத்ரா கடனுதவித் திட்டத்தில் 36% சிறுபான்மையின மக்கள் பயனடைந்துள்ளனர். விவசாயிகள் கௌரவ நிதி பெற்றவர்களில் 33% சிறுபான்மையினர். உஜ்வாலா திட்டத்தில் பயனடைந்தவர்களில் 37% சிறுபான்மையினர். மேலும், சிறுபான்மையின பெண்குழந்தைகள் பள்ளிக் கல்வி முடித்ததும், ரூ. 51,000 நிதி உதவி, நமது பாரதப் பிரதமர் ஆட்சியில் வழங்கப்படுகிறது. ஆனால், திமுக சிறுபான்மையின மக்களுக்காகக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன?
விழாவில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, முன்னாள் மாநிலத் தலைவர் அக்கா திருமதி Dr.தமிழிசை சவுந்தரராஜன், மாநிலத் துணைத்தலைவர் அண்ணன் திரு கரு நாகராஜன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் சகோதரர் திரு அமர் பிரசாத் ரெட்டி, தேசிய சிறுபான்மையினர் அணிச் செயலாளர் அண்ணன் திரு. சையத் இப்ராஹிம், சிறுபான்மையினர் அணி மாநிலத் தலைவர் அக்கா திருமதி டெய்சி தங்கையா, மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு ANS பிரசாத், மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை அவர்கள்
