Home Uncategorized பானி பூரி சாப்பிட்டால் கேன்சர் வருமாம்

பானி பூரி சாப்பிட்டால் கேன்சர் வருமாம்

கர்நாடக மாநிலத்தின் உள்ள கடை மற்றும் உணவகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பானி பூரி மற்றும் அதனுடன் சேர்க்கப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் விற்கப்படும் பானிபூரியில் ரசாயனங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு தமிழக அரசு தரப்பில் அறவுறுத்தப்பட்டுள்ளது

கடைக்காரர்கள், பூரியைப் பெரும்பாலும் தங்கள் விரல்களால் உடைக்கிறார்கள்; அதற்குள் மசாலாவை வைத்து, பானியில் முக்கித் தருகிறார்கள். அவர்களின் கை விரல்களின் நகத்தில் படிந்துள்ள அழுக்குகளும், கையில் உள்ள அழுக்கும் பானியிலும் ஒட்டிக்கொள்ளும். சுத்தம் இல்லாமல் பரிமாறப்படும் பானி பூரியை சாப்பிடுவது, வயிற்றில் புழுக்களை உற்பத்திசெய்ய வழிவகுக்கும். அவர்களின் கைகளில் பாக்டீரியாத் தொற்று இருந்தால் அவை நமக்கு வாந்தி, வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும் மேலும், ஹெபடைடிஸ் ஏ உண்டாவதற்கான அபாயமும் இருக்கிறது
அந்தச் சின்னஞ்சிறு பூரியைத் தயாரிக்கும் எண்ணெய் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பது நமக்குத் தெரியாது. மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரியை எடுத்துக்கொண்டால், உடலில் கெட்ட கொழுப்பு சேரும். இது புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. ஆகவே நண்பர்களே இதுபோல ஜங் ஃபுட்டை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்போம்

Exit mobile version