பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் – சரஸ்வதி அம்மையார் ஆகியோரின் பெயர்த்தியும், மருத்துவர் அன்புமணி – சௌமியா ஆகியோரின் மகளுமான சங்கமித்ராவுக்கும் சென்னை சோழிங்கநல்லூர் திரு. பூ. தனசேகரன், திருமதி. கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜிக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
இதில், பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.
