Home Uncategorized பேரறிவாளன் விடுதலை வழக்கு – சுப்ரீம் கோர்ட் கேள்விகளை எழுப்பியுள்ளது

பேரறிவாளன் விடுதலை வழக்கு – சுப்ரீம் கோர்ட் கேள்விகளை எழுப்பியுள்ளது

பேரளிவாளனை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆளுநரின் சார்பில் மத்திய அரசு ஆஜராவது ஏன்? என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை  சுப்ரீம் கோர்ட் எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி பேரறிவாளன் தரப்பில் விடுதலை செய்யகோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது, அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா? கடந்தமுறை 2 முடிவுகளை தேர்வு செய்யக் கூறினோம். ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? ஆளுநர் சார்பில் மத்திய அரசு ஆஜராவது ஏன் என்பதற்கு பதிலளியுங்கள்.

ஆளுநர் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்காமல் பல ஆண்டுகள் கால தாழ்த்தியதற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

பேரறிவாளனை விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கு தான் அதிகாரம் உண்டு: மத்திய அரசு வழக்கறிஞர்

இந்திய தண்டனை பிரிவு 302 மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் இருக்கிறதா: உச்சநீதிமன்றம்

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி மத்திய மற்றும் மாநில அரசு இரண்டிற்கும் இதில் அதிகாரம் உண்டு: மத்திய அரசு

அப்படி எனில் இந்த சட்டப்பிரிவின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மன்னிப்புகளின் நிலை? சுப்ரீம் கோர்ட்  கேள்வி

அது பிரிவு 432 ந் கீழ் விவாதிக்கப்பட வேண்டியது. பிரிவு 72 இதில் முடிவு செய்ய வேண்டியது: மத்திய அரசு

நீங்கள் இன்னமும் எங்களது கேள்விக்கான பதிலை கூறவில்லை :உச்சநீதிமன்ற நீதிபதிகள்

மாநில அமைச்சரவை தனது சட்டஅதிகாரத்தில் முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பும் போது ஆளுநர் அதன் மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை செலுத்த முடியாது

ஒரு நபரை விடுவிக்கவோ/ விடுவிக்க மறுக்கவோ தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது அமைச்சரவை முடிவிற்கு அவர் கட்டுப்பட்டவர்: தமிழக அரசு

Exit mobile version