நடிகர் யோகிபாபு நடிப்பில், சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘பேய் மாமா’. இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்னேஷ் ஏலப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
கூர்கா பட பிரபலம் ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரீத்தம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

