பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ‘டிராகன்’ திரைப்படம் இதுவரை 10 நாட்களில் உலகம் முழுவதும் ₹100 கோடி வசூலை கடந்துவிட்டது! படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர். இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான இப்படத்தை, ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதால், பிரதீப் ரங்கநாதன் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்து வருகிறார்.
