பிள்ளையார்பட்டி என திருநாமம் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது.
பிள்ளையார்பட்டி என்னும் பெயரே இது விநாயகப்பெருமான் கோயில் கொண்டருளும் ஒரு சிற்றுர் என்பதை நன்கு விளங்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும், 1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், 2. மருதங்குடி, 3. திருவீங்கைகுடி, 4. திருவீங்கைச்வரம், 5. இராசநாராயணபுரம் என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு. மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன.
பல்லவர் காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட குடைவரை கோவில் பிள்ளையார் பட்டி கோவில் பூர்வீக பெயர் எருக்காட்டூர் எனவும் பத்து வகை பெயர் கொண்ட ஊர்! வாதாபி வெற்றிக்கு பிறகு வாதாபியில் இருந்து கொண்டு வந்த விநாயகருக்கு நான்கு கரங்கள் இங்குள்ள விநாயகர் கிபி நான்காம் நூற்றாண்டில் ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்ற சிற்பியால் ஆறடி உயரத்தில் வடக்கு நோக்கிய வலம்புரி விநாயகர் செதுக்கப்பட்ட வரலாறு கோவிலில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.
பாதி கோவில் குடைவரை கோவில் கிபி 12 ஆம் நூற்றாண்டில் செட்டிநாடு நகரத்தார் வசமான பிறகு கற்றளி வகையான செங்கல்களை கொண்டு கட்டிய கோபுரம் அமைக்கப்பட்டது.
திருவீசர் மருதீசர் என்று சிவலிங்கமும் உண்டு திருமண வரமளிக்கும் கார்த்தியாயினி குழந்தை வரமளிக்கும் நாகலிங்கம் செல்வ வரமளிக்கும் பசுபதீஸ்வரர் சன்னதியும் உள்ளது.
மருதீசர் சதுர வடிவ கருவறையில் வட்ட வடிவ ஆவுடை மீது காட்சி தருகிறார் கருவறை வெளிப்புற சுவற்றில் பரிவார மூர்த்திகள் இல்லாமல் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டது. இங்கு 30 செப்பு திருமேனிகள் உள்ளது. மேல் சுற்று வடகிழக்கு பகுதியில் வாடாமலர் மங்கை பத்ம பீடத்தில் தெற்கு நோக்கி அம்மன் காட்சி தருகிறார். வடக்கு கோபுர வாயிலின் கிழக்கு திசையில் சிவகாமி அம்மன் சன்னதி உள்ளது.
