Thursday, March 5, 2026
HomeUncategorizedபிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று துவக்கம்

பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 5-ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ம் தேதியும் துவங்கியது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள்.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர். தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

இத்தேர்வை கண்காணிக்க 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்களும் அமைக்கப்–பட்டுள்ளன. அரசு பொதுத்தேர்வில் எவ்வித குழப்பத்திற்கும் இடம் அளிக்காத வகையில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வித் துறை உறுதியாக உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் பல்வேறு ஏற்பாடுகளை கல்வி அதிகாரிகள் செய்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments