தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு இல்லை. கேளிக்கை பொழுதுபோக்கு பூங்காக்களில் 50 சதவீத பெருடன் இயங்க அனுமதி
மழலையர் நர்சரி பள்ளிகளை திறப்பதற்கான தடை நீடிக்கிறது. தமிழகத்தில் ஞாயிறு பொது முடக்கம் ரத்து
வரும் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து. கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகம் தொழில் பயிற்சி மையங்களும் செயல்பட பிப்ரவரி 1 முதல் அனுமதி
1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் பிப்ரவரி 1ஆம் தேதி திறக்க உத்தரவு. துணி நகை கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதி
சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது

