அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தற்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டார். அந்த வகையில், ஓஹியோ மாகாணத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டிட்ரம்ப், தன்னை அதிபராக தேர்வு செய்யா விட்டால் ரத்தக்களறி ஏற்படும் என்று எச்சரித்தார். “அமெரிக்கா வரலாற்றில் அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான நாளாகும். என்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தகளறி ஏற்படும்” என்றார்.
அவர் எதற்காக இப்படி பேசினார் என்பது குறித்து தெளிவாக அவர் சொல்லவில்லை என்பதால் அமெரிக்க மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
