Saturday, May 9, 2026
HomeUncategorizedபிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்:

இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில் பிரதமர் மோடி உரை.

மக்களிடம் ஒத்துழைப்பு இருந்ததாலே இந்த சாதனை சாத்தியமானது.

100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்ட சாதனை நாட்டு மக்கள் 130 கோடி பேரையும் சேரும்- பிரதமர் மோடி.

கொரோனா குறித்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த சாதனை பதிலளித்துள்ளது.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம்.

தடுப்பூசி செலுத்துவதில் எந்த விஐபிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை; விஐபி கலாச்சாரத்தை ஒழித்துள்ளோம் – பிரதமர்.

கடைக்கோடி மக்களுக்கும் வேக்சின் செல்வதை உறுதி செய்துள்ளோம்.

கொரோனா காலத்தில் மக்களிடம் நம்பிக்கை அளிப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

வேக்சின் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினோம்.

இந்தியாவின் வேக்சின் திட்டம் முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமானது.

அறிவியல் முறைப்படி செயல்பட்டு மக்களுக்கு வேக்சினை கொண்டு சென்றோம்.

தடுப்பூசி சாதனையின் மூலம் நம் மீதான விமர்சனங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments