Wednesday, March 4, 2026
HomeUncategorizedபள்ளிகள் திறப்பு - அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று முக்கிய ஆலோசனை

பள்ளிகள் திறப்பு – அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது மற்றும் அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகம் முழுவதும் பள்ளி திறந்து, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துமாறு, இந்திய மருத்துவ கவுன்சிலான (ஐ.சி.எம்.ஆர்) அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்தும், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்தும், பள்ளி கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் சில மாவட்ட கல்வி அலுவலர்களும், பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை, துணை இயக்குனர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments