பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என 10-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள். 3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சலுக்கு எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியும்.
குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால், முதலில் அரசு தான் நிற்கும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை.
மேலும் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்ற நிலையை உருவாக்க வேண்டாம் – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

