Tuesday, March 24, 2026
HomeUncategorizedபழம்பெறும் நடிகை ’சவுக்கார்’ ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது - பிரபலங்கள் வாழ்த்து!!

பழம்பெறும் நடிகை ’சவுக்கார்’ ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது – பிரபலங்கள் வாழ்த்து!!

’சவுக்கார்’ ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் வாழ்த்து!!

குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்ம விருதுகளைப் பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்திய அரசு அறிவித்தது. அதில் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையுமான ’சவுக்கார்’ ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

இந்த விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, “தேசிய அளவில் கொடுக்கும் விருதுகளுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. அதனால், விருது குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியாக ஏற்கிறேன் என்று சொன்னேன்” என்று ’சவுக்கார்’ ஜானகி தெரிவித்து இருந்தார். 90 வயதான ’சவுக்கார்’ ஜானகி சிவாஜி கணேசன், எம்ஜிஆர், நாகேஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments