Monday, March 16, 2026
HomeUncategorizedபழனி முருகன் கோவில் ரோப்காரில் பயணிக்க முன்னுரிமை சலுகை ரத்து

பழனி முருகன் கோவில் ரோப்காரில் பயணிக்க முன்னுரிமை சலுகை ரத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலுக்கு ரோப்கார் மூலம்  செல்ல குழந்தைகள், முதியோர்கள் என பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ரோப்காரில் ஒருமுறை பயணிக்க ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் சிபாரிசு கடிதத்துடன் பக்தர்கள் பலர் ரோப்காரில் பயணம் செய்து வந்தனர். இந்தநிலையில் ரோப்கார் நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், ரோப்காரில் எந்தவித முன்னுரிமையும் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments