தமிழக-கேரள எல்லையில் உள்ள ஆரியங்காவு பகுதியில் பாலருவி அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி கடும் வறட்சி காரணமாக பாலருவி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக கேரளா வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களாக பாலருவி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டத்தொடங்கியுள்ளது.
இதனால் 35 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

