Home Uncategorized பங்காரு அடிகளாரின் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு

பங்காரு அடிகளாரின் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு

மாரடைப்பால் காலமான மேல்மருத்தூர் பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

அடிகளார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அஞ்சலி செலுத்த உள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

மேலும் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரகணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version