புரட்சித்தலைவர் அவர்களுக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும்
‘பொன்மனச்செம்மல்’ என்ற பட்டத்தை வழங்கிய வாரியார் சுவாமிகளின் நினைவுநாள் இன்று! ஒருமுறை வேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்து இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் ‘கிருபானந்த ‘லாரி’ வருகிறது’ என்று கிண்டல் அடித்துத் தட்டிவைப்பார்கள்.
தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார், அவர் தங்கியிருந்த வீட்டு ஜன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. ‘வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா? உடனே, தட்டியெல்லாம் அகற்றுங்கள்!’ என்று தன் தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் பெரியார்!

