இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்த ஜிகே மணியின் மகன் தமிழ் குமரன் அண்மையில் பதவி விலகினார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற வரும் பொதுக்குழுவில் தனது பேரனுக்கு (முகுந்தன்) இளைஞர் அணி பொறுப்பை ராமதாஸ் அறிவித்தார், அதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் விருப்பம் இல்லாதவர் கட்சியிலிருந்து வெளியேறலாம். என ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அன்புமணி கேள்வி
பாமகவை குடும்ப கட்சியாக மாற்ற முயற்சிக்கிறீர்களா? என அன்புமணி கேள்வி தனது அக்கா மகனுக்கு கட்சியில் இளைஞரணி பதவி கொடுப்பதற்கு அன்புமணி எதிர்ப்பு
கட்சியை நிறுவியது நான் தான் விருப்பமில்லாதவர்கள் வெளியேறலாம்- ராமதாஸ்
இதை அடுத்து பனையூரில் தனக்கென ஒரு தனி அலுவலகம் உள்ளது தொண்டர்கள் என்னை அங்கே வந்து சந்திக்கலாம்..என்று அறிவித்து மைக்கை எறிந்து விட்டு வெளியேறினார் -அன்புமணி
