சென்னை தலைமை செயலகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், முதலமைச்சர் பேசியதாவது – பேரிடர் காலங்களில் அரசு துறைகள் தனித்தனியாக இயங்காமல், ஒன்றாக இணைந்து இயங்க வேண்டியது மிகவும் அவசியம். புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
குடிநீர், தரமான உணவு, குழந்தைகளுக்கு தேவையான பால், ரொட்டி போன்றவற்றை வழங்க வேண்டும்.அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவு வைத்திருப்பதை இப்போதே உறுதி செய்ய வேண்டும்.தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய் பரவலைத் தடுக்கவும் வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருந்துகள், ஆக்சிஜன் உருளைகள், போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.
