மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை செய்யும் வகையிலான பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, சட்டத்திருததம் கொண்டு வர வழிகாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

