சென்னை-சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவியேற்கிறார்; அவருக்கு கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு, கவர்னர் ரவி இன்று காலை 9:30 மணிக்கு, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்வில் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதற்காக, ஜெய்ப்பூரில்இருந்து சென்னைக்கு முனீஸ்வர் நாத் பண்டாரி நேற்று வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

