Home Uncategorized புதுக்கோட்டை கம்பன் பெருவிழா போட்டிகள்

புதுக்கோட்டை கம்பன் பெருவிழா போட்டிகள்

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 49 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஜூலை 12 தொடங்கி 21 வரை பத்து நாட்கள் நகர்மன்ற அரங்கத்திலே சிறப்பாக நடைபெற இருக்கிறது.

கம்பன் பெருவிழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள். இன்று வைரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. கம்பன் பாடல்கள் ஒப்பித்தல்,
பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. 40க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நடுவர்களாகப் பணியாற்றினர். போட்டியில் பங்கேற்ற கல்லூரி பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்றதற்கான பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 200 க்கும் அதிகமான மாணவர்களுக்கு 19/7/2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நகர்மன்ற அரங்கத்தில் புதுக்கோட்டை மாநகர மேயர் திருமதி திலகவதி செந்தில் அவர்கள் பரிசுகளை வழங்குகிறார். போட்டியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

Exit mobile version