புதுக்கோட்டையில் பல திருக்கோயில்கள், தனியார் இல்லங்கள் என நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கொலு வைக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள கொலு மிக நீளமாக அமைக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் பொம்மைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஏற்பாட்டைச் செய்த வழக்கறிஞர் திரு மாதவன் அவர்களை புதுக்கோட்டை சமஸ்தான மகாராணியார் பாராட்டினார்.
