Thursday, February 5, 2026
HomeUncategorizedஇந்த weekend எங்க போகலானு யோசிச்சிட்டு இருக்கீங்களா? இங்க போய்ட்டு வாங்க! செம ஸ்பாட்!

இந்த weekend எங்க போகலானு யோசிச்சிட்டு இருக்கீங்களா? இங்க போய்ட்டு வாங்க! செம ஸ்பாட்!

தென்னிந்தியாவின் காஷ்மீர் எனப் புகழப்படும் மூணார், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்த ஒரு சிறப்புமிக்க நகரம். முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை என்னும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் மூணாறு. தேயிலை உற்பத்தி இங்குள்ள பிரதான தொழிலாகும். மூணாறு நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1600 முதல் 1800 மீட்டர் உயரத்தில் உள்ளது. தேயிலை தோட்டங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் இந்நகரின் அழகை மேலும் உயர்த்துகின்றன. கொடைக்கானல், ஊட்டிக்கு அடுத்து இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக மூணாறு விளங்குகிறது. நகரின் பெரும்பாலான மக்கள் தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

தென்னிந்தியாவின் மூன்றாவது உயரமான மலையாக அமைந்துள்ள ஆனைமுடி சிகரம், மூணாறு மலைப்பகுதியில் உள்ள ராஜமலை தொடரில் அமைந்துள்ளது. இது லோக்கார் எஸ்டேட்டின் எல்லையையும் தொடுகிறது. மூணாறு பகுதியில் அழிந்து வரும் வரையாடு விலங்கினம் ஏராளமாக உள்ளது, மேலும் இங்கு உள்ள குறிஞ்சி மலர் காடு ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் பூக்கும் அதிசயம் கொண்டது, இது சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்கிறது.

 மூணாறில் பார்க்க வேண்டிய இடங்கள்:

 

  •  ராஜமலை தேசிய பூங்கா 
  •  ஆனை முடிமலை 
  •  ரோஸ் கார்டன்
  •  மாட்டுப்பட்டி அணை 
  •  எக்கோ பாயிண்ட் 
  •  குண்டலிடம் அணை  
  •  டாப் ஸ்டேஷன்

ராஜமலை, இரவிக்குளம் எனப்படும் இந்த மாநிலத்தின் முதல் தேசிய பூங்கா, மலைகளில் உள்ள புல்வெளிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் குன்றிய வெப்ப மண்டல மழைக்காடுகளால் அழகுற உருவாக்கப்பட்டுள்ளது. நீலகிரி தார், சாம்பார் மான், சிங்கவால் மக்காக்குகள் மற்றும் பல பறவை இனங்களை இங்கு காணலாம்.

மூணாறுக்கு செல்வதற்கு, தமிழகத்திலிருந்து உதுமலைப்பேட்டை, மதுரை, தேனி, கோவை மற்றும் சென்னையிலிருந்தும்; கேரளத்தின் கொச்சி, ஆளுவா, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களிலிருந்தும் பேருந்தில் செல்லலாம். கர்நாடகாவின் பெங்களூரிலிருந்து உடுமலை வழியாக மூணாறுக்கு பேருந்து வசதி உள்ளது. உடுமலையிலிருந்து மூன்று மணி நேரமும், போடிநாயக்கனூர் நகரிலிருந்து இரண்டு மணி நேரமும் சிற்றுந்து மூலம் செல்லலாம். பெங்களூரு, மைசூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய நகரங்களிலிருந்து உடுமலை வழியாகவும், திண்டுக்கல், மதுரை, தேனி நகரங்களிலிருந்து போடி வழியாகவும் பேருந்துகள் செல்கின்றன. போடி மெட்டு என்ற அழகிய மழை உச்சியை அடையும் முன், இந்த நகரை அடையலாம்.

 ஆனை முடிமலை 

ஆனைமுடி சிகரம் இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு உள்ளே அமைந்துள்ள ஆலயம் டி சிகரமும் தென்னிந்தியாவிலிருந்து உயரமான சிகரமாகும் இது 2700 மீட்டர் உயரம் கொண்டது. இரவி குளத்தில் உள்ள வன மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் அனுமதி பெற்று இந்த சிகரத்தில் ஏறலாம்.

மாட்டுப்பட்டி அணை 
 
பார்வையாளர்கள் வருகை தரும் மற்றொரு முக்கிய இடமானது மாட்டுப்பெட்டி மூணாறு நகரில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது இது கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மாட்டுப்பட்டி அதன் கல் கட்டு அணை மற்றும் அழகிய ஏரிக்காக புகழ்பெற்றது. அங்கு படகு சவாரியும் வழங்கப்படுகிறது. இந்தோ ஸ்விஸ்  கால்நடை திட்டத்தினால் நடத்தப்படும் பால் பண்ணைக்கும் புகழ்பெற்றது. அங்கு வெவ்வேறு உயிர் இரக பசுக்கள் பராமரிக்கப்படுவதை காணலாம்.

டாப் ஸ்டேஷன் மூணாரிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்திலும், கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. இது மூணாறு-கொடைக்கானல் சாலையில் உள்ள உயரமான முனையாகும். தமிழ்நாட்டின் பரந்த இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க மற்றும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூப்பதை அனுபவிக்க பலர் டாப் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். இது மூணாறின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று.

எக்கோ பாயிண்ட் போனாரில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இது அமைதியான ஏரியின் கரையில் அமைந்துள்ளது மற்றும் சுற்றியுள்ள மலைகள் மற்றும் பசுமையான காடுகளின் பரந்த காட்சியை வழங்குகிறது. மூணாறு எக்கோ பாயிண்ட் குடும்ப சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாகும், பறவைகளை கண்டு ரசிக்க, ஏரியில் படகு சவாரி செய்ய, இயற்கை நடைகளுக்கு செல்ல, நட்சத்திர புகைப்படங்கள் எடுக்க, மற்றும் தெருவில் ஷாப்பிங் செய்ய வசதிகள் உள்ளன. எக்கோ பாயிண்ட் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும், காலை 6:00 மணி முதல் மாலை 7:30 மணி வரை அணுகலாம். பெரியவர்களுக்கு ரூபாய் 30 மற்றும் குழந்தைகளுக்கு ரூபாய் 15 என்ற நுழைவு கட்டணமும், படகு சவாரிகளுக்கான கட்டணமும் கூடுதலாக இருக்கும். படகுக்கு படகு மாறுபடும் புகைப்படங்களை கிளிக் செய்வதற்கும் வீடியோக்களை பதிவு செய்வதற்கும் கட்டணம் இல்லை.

ரோஸ் கார்டன் மூணாறில் அமைந்துள்ள ரோஸ் பூங்கா ரோஜா பிரியர்களுக்கு ஒரு கனவு உலகமாகும். இந்த தோட்டத்தில் பல வண்ணங்களில் ரோஜாக்கள் மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான அரிய வகை மலர்களும் மூலிகைச் செடிகளும் உள்ளன. ரோஸ் கார்டனின் பின்னால் அமைந்துள்ள தேயிலை, ஏலக்காய் மற்றும் வெண்ணிலா தோட்டங்கள் இயற்கையால் சூழப்பட்ட மிகவும் அழகான இடங்களாகும். ஸ்ட்ராபெரி, லிச்சி, ரம்புட்டான், ஆம் போன்ற பருவகால வெப்பமண்டல பழங்களும், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், பீன்ஸ் போன்ற காய்கறிகளும் இங்கு விளைகின்றன. இது பல்வேறு பறவையினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது.

குண்டலா அணை

மூணாரிலிருந்து டாப் ஸ்டேஷன் செல்லும் வழியில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டலா அணை ஒரு அழகிய அணையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. குண்டலா அணையின் செர்ரி மலர்கள் வருடத்திற்கு இரண்டு முறை மலர்கின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சி மலர்கள் குண்டலா அணையை சுற்றியுள்ள மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் பூக்கும். இந்த ஏரியில் படகு சவாரிகள், பெடல் படகுகள், காஷ்மீரி ஸ்டிக்கரா படகுகள் மற்றும் வரிசை படகுகள் வாடகைக்கு கிடைக்கும். இங்கு டாடா டீ லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு கோல்ப் மைதானமும் அமைந்துள்ளது.

தேயிலை அருங்காட்சியகம்

தேயிலை தோட்டங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து மூணாறு தனித்துவமான மரபினை கொண்டுள்ளது. கேரளாவில் உயர்ந்த இடங்களில் உள்ள தேயிலை தோட்டங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியின் சில அற்புதமான சுவாரசியமான அம்சங்கள் உள்ளன. டாடா டீ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அருங்காட்சியகம் திறந்துள்ளது, இது கலை பொருட்கள், புகைப்படங்கள், மற்றும் இயந்திரங்களை காட்சிக்கு வைத்துள்ளது. இவை மூணாறில் தேவி தோட்டங்களில் தோற்றம் மற்றும் வளர்ச்சியை பற்றி ஒரு கதையை கொண்டிருக்கின்றன இந்த அருங்காட்சியகம் டாட்டா டீயின் நல்ல தண்ணி எஸ்டேட்டில் அமைந்துள்ளது மற்றும் அது பார்ப்பதற்கான மதிப்பினை கொண்டுள்ளது.

மூணாறிலிருந்து தமிழகம்-கேரளா எல்லையான தேனி மாவட்டத்தின் எல்லைக்கு வந்து, அங்குள்ள மலைகளை கண்டு ரசிக்க முடியும். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் சென்று ஓய்வெடுக்க அழகிய இடமாகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments