Saturday, July 25, 2026
Homeவணிகம்இந்தியாவில் இனி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளா? – RBI-யின் அதிரடி திட்டம்!

இந்தியாவில் இனி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளா? – RBI-யின் அதிரடி திட்டம்!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை நிறுவனமான பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் லிமிடெட் (BRBNMPL), காகித நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் (பாலிமர்) பணத் தாள்களை அச்சடிப்பதற்கான சோதனை முயற்சியாகப் சர்வதேச அளவில் டெண்டர் கோரியுள்ளது.

வழக்கமான பருத்தி காகித நோட்டுகளை விட 2 முதல் 6 மடங்கு வரை கூடுதல் ஆயுட்காலம் கொண்ட பாலிமர் நோட்டுகள் எளிதில் சேதமடையாது, அழுக்கடையாது என்பதோடு, கள்ள நோட்டுகள் தயாரிப்பதையும் வெகுவாகக் கட்டுப்படுத்தும் என்பதால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2025-26 நிதியாண்டில் மட்டும் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ₹4,875 கோடி செலவிடப்பட்டுள்ள சூழலில், இரு குறிப்பிட்ட பண மதிப்புகளில் இச்சோதனையை மேற்கொள்ள 68,000 ரீம் பாலிமர் தாள்களைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தகவல்களின் ரகசியத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இத்தெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் பாகிஸ்தான் அல்லது சீனாவில் இருந்து எந்தவொரு மூலப்பொருட்களையும் பெறக் கூடாது என்றும், அந்நாடுகளில் பணிபுரிந்த ஊழியர்களை இதில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments