Wednesday, March 18, 2026
HomeUncategorizedபிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கல்வித்துறை தகவல்

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கல்வித்துறை தகவல்

2ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், இயற்பியல், பொருளியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த 3 வாரமாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.3) நிறைவு பெறுகிறது.

இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் மட்டும் நடைபெறவுள்ளது. பொதுத்தேர்வு முடிவதை அடுத்து பெரும்பாலான பள்ளிகளில் பிரிவு உபசார விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவதை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.10 முதல் 21-ம் தேதி நடைபெற உள்ளன. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments