இந்திய ராணுவத்தின் வீரத்தையும், ‘ஆபரேஷன் சிந்துார்’ (Operation Sindoor) நடவடிக்கையின் வெற்றியையும் போற்றும் வகையில், சமூக வலைதளங்களில் நமது முகப்புப் படங்களை (Display Picture) மாற்றி ராணுவத்தினருக்கு மரியாதை செலுத்துவோம் எனப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே மே 7-ஆம் தேதி, பகல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக எல்லையைத் தாண்டிச் சென்று தீவிரவாத முகாம்களை அழித்த இந்தியப் படைகளின் துணிச்சலான செயலை நினைவு கூர்ந்துள்ள அவர், ஒவ்வொரு இந்தியனும் நமது படைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை முன்னிட்டு எக்ஸ் (X), பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் தனது முகப்புப் படத்தை ‘ஆபரேஷன் சிந்துார்’ சின்னத்திற்கு அவர் மாற்றியுள்ளார்.
