Home செய்திகள் நொய்டா சர்வதேச விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

நொய்டா சர்வதேச விமான நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கௌதம் புத்தா நகர் ஜேவார் (Jewar) பகுதியில் அமைந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் (Noida International Airport) முதல் கட்டடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கிறார்.

சுமார் 1,300 ஹெக்டேர் பரப்பளவில், 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் நான்காவது மிகப்பெரிய விமான நிலையமாக உருவெடுக்க உள்ளது.

முதற்கட்டமாக ஆண்டுக்கு 1.2 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட இந்த நிலையம், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெரிசலைக் குறைப்பதோடு, மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவு ஊக்குவிக்கும்.

அதிநவீன வசதிகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘நெட் ஜீரோ’ (Net Zero) உமிழ்வு கட்டமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Exit mobile version