தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை ஜன.9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரையோடு கரும்பும் சேர்க்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் முழு கரும்பு வழங்க இருப்பதாகவும், கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதனால், 2ம் தேதி தொடங்க இருந்த திட்டம் 9ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
